கனவு காணுங்கள், அதற்கு ஏற்ப கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பேச்சு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 28 March 2022

கனவு காணுங்கள், அதற்கு ஏற்ப கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பேச்சு.

IMG_20220328_195759
கனவு காணுங்கள், அதற்கு ஏற்ப கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் மாநில அளவிலான பளு தூக்கும் சாம்பியன் ஷிப் போட்டியில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பேச்சு.


தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாடு அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளு தூக்கும் சாம்பியன் ஷிப் போட்டி 2021-22 சாயர்புர ம் போப் நினைவு மேல்நிலை பள்ளி நூற்றாண்டு மண்டபத்தில்  மார்ச் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. 


போட்டியின் நிறைவு நாளான மார்ச் 27 ஞாயிறு அன்று மாலையில் தமிழ்நாடு மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் தலைமையில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த சேலம் மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி கோப்பையும், சான்றிதழ்களும், அதனுடன் பளு தூக்கும் போட்டிகளில் உலகளவிலும் இந்தியளவிலும்  வெற்றி பெற்ற முன்னாள் வீரர், வீராங்கனையை கவுரவிக்கும் வகையில் பதக்கங்கள், நினைவு பரிசுகள் வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அமைச்சர் வீர வீராங்கனைகளுக்கு உற்சாகம் தரும் வகையிலும் விளையாட்டு மனிதர்களை எத்தனை ஒழுங்கு செய்யும் என்றும் பேசினார்.


இந்த போட்டி நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும்சங்கத்தின் தலைவரும் சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் தாளாளருமான இ ரா . ராஜேஷ் ரவி சந்தர்  செய்திருந்தார்.


நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் எம். தமிழ் செல்வன், பொருளாளர் வி. ருத்ர மூர்த்தி, துணை தலைவர்கள் டி. நவராஜ் புல்கானின் டேனியல், பி. பால்ராம், எஸ். எஸ். பி. அசோக் மற்றும்  திமுக முக்கிய பிரமுகர்கள், உள்ளூர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வில் பூம்புகாரை சேர்ந்த இரட்டையர்களான சிறுமி ஜே.ஜெய ஆனந்தி,சிறுவன் ஜே.ஜெயசந்திரன் இருவரின் யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும்சங்கத்தின் தலைவரும் சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் தாளாளருமான இ ரா . ராஜேஷ் ரவி சந்தர் பேசுகையில் நடந்து முடிந்த போட்டியில் முதலிடம் பெற்ற நமது மண்ணின் சாயர்புரம் பகுதியை சேர்ந்த வீராங்கனை

ஆனந்த ஜோதி (59 கிலோ )48 எடை பிரிவில்  முதலிடம் பெற்றுள்ளார். இந்த மாணவி யுடைய திறமையை வியந்துபோன நாம் கரகோஷம் எழுப்புவோம்.  இத்தனை திறமையுடைய  இவரை உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற செய்திடவும் அவருடைய பெருமையை உலகறியவும் தன்னால் செய்வேன் என்று வாக்குறுதி கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad