போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 March 2022

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சுலுவை சங்கம் சார்பாக சுமார் 70 மாணவ-மாணவிகள் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சமூகசேவை செய்தனர். 

சீனிவாச நகர், லட்சுமிபுரம், சாலைபுதூர், இனாம் மணியாச்சி, புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு மற்றும் மந்தித்தோப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 14 போலியோ சொட்டுமருந்து முகாம்களில் பங்கு கொண்டு சொட்டு மருந்து வழங்குதல்,  அவர்களின் விபரங்களை பதிவு செய்தல், மக்களிடையே போலியோ சொட்டுமருந்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். மேலும், கயத்தார் சுங்கச்சவடியிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செவிலியர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். 


மேலும், வில்லிசேரி ஆரம்ப சுகாதார மையத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள 4,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கல்லூரியின் மாணவ மாணவிகள் நேரில் சென்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டதை உறுதி செய்ததுடன், விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து வழங்கினர். 


கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சுலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்   முகாமில் பணியாற்றிய மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad