கஞ்சா விற்பனை செய்த 2 ரவுடிகள் கைது, 1.25கி கஞ்சா பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 March 2022

கஞ்சா விற்பனை செய்த 2 ரவுடிகள் கைது, 1.25கி கஞ்சா பறிமுதல்.

 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி உட்பட 2 பேர் கைது - 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை  கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது  வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (எ) நாகூர்ஹனிபா மகன் யாசர்அராபத் (25)  தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர்மைதீன் மகன் ஹனிபாமரைக்காயர் (29) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகள் யாசர்அராபத் மற்றும் ஹனிபாமரைக்காயர் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி கைதுசெய்யப்பட்ட எதிரிகளில் யாசர்அராபத் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கொலை மிரட்டல் என 2 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 7 கஞ்சா விற்பனை வழக்குகளும் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad