கோவில்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 30ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 March 2022

கோவில்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 30ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி.

கோவில்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 30ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி மஞ்சள் பால் அபிஷேக விழா முன்னிட்டு 1001 பக்தர்கள் மஞ்சள் பால் குடம் எடுத்து வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாதாங்கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 30ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி மஞ்சள் பால் அபிஷேக விழா முன்னிட்டு 1001 பக்தர்கள் மஞ்சள் பால் குடம் எடுத்து வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.கடந்த 26 அன்று மாலை 8 மணி அளவில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது‌. இத்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இன்று முக்கிய விழா மாசி மகா சிவராத்திரி மஞ்சள் பால் அபிஷேக விழா நடைபெற்றது.மேளதாளங்கள் முழங்க 1001 பக்தர்கள் மஞ்சள் பால் குடம் ஊர்வலம் எடுத்து வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று இரவு சுவாமிக்கு முதல் கால் பூஜையிலிருந்து நான்காம் கால் பூஜை நடைபெற உள்ளது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad