ஏரல் : வரிவிதிப்பு, மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 31 March 2022

ஏரல் : வரிவிதிப்பு, மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு.

ஏரல் பேரூராட்சி வரிவிதிப்பு, மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் ஏரல் நகர தி மு க செயலாளர் நா. பார்த்திபன் வாழ்த்தினார்


ஏரல் பேரூராட்சியில் மார்ச் 31அன்று காலை    பேரூராட்சி வரிவிதிப்பு, மேல் முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது.  தலைவர் சர்மிளா தேவி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் செயல் அலுவலர் தனசிங், துணை தலைவர் J.C.ஜான்ரத்தினபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நியமணகுழு உறுப்பினராக J.ஜவ்பர் சாதிக் அலி ,வரிவிதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக A.முத்துமாலை., P.மகேஸ்வரி, R.பெரியசாமி (எ)ஆனந், L.அன்பு நவீன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் தி மு க சார்பில் ஏரல் நகர தி மு க செயலாளர் நா பார்த்திபன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad