ஜூன் 1 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஒத்தாசை மாதா ஆலய பண்டிகை விழாவை ஒட்டி அன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு அருட்தந்தை செல்வ ஜார்ஜ் சிறப்பு நற்செய்தி வழங்கினார் தொடர்ந்து அசனத்திற்காக தயாரிக்கப்பட்ட விருந்தினை பிரார்த்தனை செய்தனர் இந்நிகழ்ச்சியில்ஆலந்தலை ஆலய உதவி பங்குத்தந்தை ஜோதிமணி கலந்து கொண்டு அசன விருந்தினை பொதுமக்களுக்கு தொடங்கி வைத்தார் ஏரல் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சமபந்தி விருந்தினை சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை சூசை ராஜா ஊர்தலைவர் தாமஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா திருவைகுண்டம் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment