அலட்சியத்தில் மின்வாரியம் - கார்டிங் லைன் இல்லாத மின் பாதை.
ஏரல், ஜூன்.02, ஏரல் பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக, முக்காணி, தூத்துக்குடி செல்லும் பிரதான சாலையில் ஏரல் மின்சார வாரியம் சார்பில் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வடக்கு தெற்காக டிரான்ஸ்பார்மர் மின் கம்பிகள் செல்கிறது. ஆனால் அந்த மின்பாதைகளின் அடிகள் கார்டிங் லைன் என சொல்லக்கூடிய பாதுகாப்பு கம்பிகள் இல்லை. இதனால் மேற்படி இடத்தில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்லும்போது கம்பிகள் உரசுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி உரசினால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட கூடும். எனவே மேற்படி மின் பாதைக்கு உடனடியாக கார்டிங் லைன் அமைத்து பாதுகாப்பு செய்து தரவும், மின்வாரிய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாஸ்ரீவைகுண்டம் செய்தியாளர் சேதுபதிராஜா.
No comments:
Post a Comment