திருச்செந்தூரில் திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் ஆயிரம் மாணவிகள் முருகன் வேடம் அணிந்து பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் 1000 மாணவிகள் முருகன் வேடமிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரைக்கு அருகில் உள்ள பைரவர் கோவில் முன்பு 1000 மாணவிகள் முருகன் வேடமிட்டு உலக சாதனை நிகழ்ச்சியாக பரதநாட்டியம் நடனம் ஆடும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
சிவசக்தி அகாடமி நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரம் மாணவிகள் முருகனின் வேடம் அணிந்து முருகனின் பக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனை பரதநாட்டிய நிகழ்ச்சியை திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ஏ.பி.செங்குழி ரமேஷ் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பாக நடனமாடிய கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் ஆர்.வாள்சுடலை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீனா, மற்றும் அகாடமி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்



No comments:
Post a Comment