ஏரல் காதிரு முகைதீன் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

ஏரல் காதிரு முகைதீன் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா

ஏரல் காதிரு முகைதீன் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா 

ஏரல் அக்டோபர்-21 ஏரல் மஹான் காதிரு முஹைதின் மஸ்தான் சாஹிப் ஒலியில்லா வருடாந்திர கந்தூரி விழா நடந்தது. முதல் நாள் விழாவிற்கு பரம்பரை அக்தார் முஹம்மது நஹிப் அன்வாரி தலைமை வகித்தார். புஹாரி, முஹம்மது நாசர், இம்ரான், அப்துல் ரஹ்மான், தெக்காடு பள்ளிவாசல் பொருளாளர் முஹம்மது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முஹம்மது ஹஸனைன் இறைவசனம் ஒதினார். சுற்று வட்டார இமாம்கள் கத்முல் குரான் ஓதி சொற்பொழிவு நடந்தது. ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்கம் தலைவர் பாக்கர் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

வர்த்தகரெட்டி பட்டி ஜமாத் தலைவர் அஹமது வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடந்தது.ஏரல் பாடகர் முகம்மது நகிப் அன்வாரி, காயல் முகம்மது ராபீக், சாகுல் ஹமீது ஆகியோர் பாடினர். விழா முடிவில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை‌ முஹைதீன் தைக்கா பள்ளி கமிட்டியார் செய்திருந்தனர்.


ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad