ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் மேல கடம்பா தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசமூர்த்தி (38) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் இன்று (21.10.2024) குற்றவாளியான கணேசமூர்த்தி என்பவருக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் முருகலட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad