அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 118 வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 118 வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை.

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 118 வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை அக்டோபர் 2ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது

02.10.2024 அஸ்திபார உபவாச ஜெபமாக நடைபெற்றது அதில் இந்திய மிஷனெரி சங்க மிஷனெரி பயிற்சி இயக்குனர் அருட்திரு பொன்னுசாமி தேவசெய்தி வழங்கினார்.

06.10.2024 அன்று சேகர முதியோர் ஞாயிறு ஆராதனையாக நடைபெற்றது சரோஜாசுந்தர்சிங் தேவசெய்தி வழங்கினார். திருச்சபையில் 58 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் இருபாலருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டு சிறப்பு ஜெபம் ஏறேடுக்கப்பட்டது.

118 வது ஆண்டு பிரதிஷ்டை, அசனத்தை முன்னிட்டு கன்வென்சன் கூட்டங்கள் 14.10.2024 திங்கள்முதல் புதன் வரை சென்னை கரை சேர்க்கும் கரங்கள் ஸ்தாபகர் சுவிஷேசகர் சிரில் தேவசெய்தி வழங்கினார். அந்திரேயா ஆலய நற்செய்தி குழுவினர் பாடல் வேளையை நடத்தினர்.

17.10.2024 வியாழக்கிழமை பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை ஆயத்த ஆராதனை தேவசெய்தியை நாலுமாவடி சேகர குருவானவர் அருட்திரு ஆபிரகாம் ரஞ்சித் டேரல் வழங்கினார்.

18.10.2024 வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை சிறப்பு திருவிருந்து ஆராதனை தேவசெய்தியை யாக்கோபுபுரம் சேகர குருவானவர் அருட்திரு அகஸ்டின் சாம்ராஜ் வழங்கினார் தொடர்ந்து கோபுரம்,மண்டபம்,பள்ளியில் சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.

18.10.2024 வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை சிறப்பு திருவிருந்து ஆராதனையைத் தொடர்ந்து 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புத்தாடை, போர்வை, துண்டு மற்றும் சிறப்பு நினைவு பரிசு, ஐக்கிய விருந்தும் வழங்கப்பட்டது.

மதியம் 2 மணிக்கு திருமறைத்தேர்வு 9 பிரிவுகளின் கீழ் 128 பேர் எழுதினர், பரிசுகள் பண்டிகை திருவிருந்து ஆராதனையில் வழங்கப்பட்டது.

118 வது ஆண்டு பிரதிஷ்டை சிறப்பு சிறுவர் பவனி மதியம் 4 மணிக்கும் ஞானஸ்நான ஆராதனை 4.30 மணிக்கும் நடைபெற்றது. ஞானஸ்நானத்தின் மூலமாக 10 நபர்கள் புதிதாக திருச்சபையில் அங்கமாக்கப்பட்டனர்.

18.10.2024 வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை ஆராதனை தேவசெய்தியை விக்கிரமசிங்கபுரம் சேகர குருவானவர் அருட்திரு கிறிஸ்டோபர் வழங்கினார், ஆலய பணிமூட்டு பொருள்கள் மற்றும் ஆலய பராமரிப்பு பணிக்காக சபைமக்கள் சேகரித்து வைத்திருந்த உண்டியல்கள் படைக்கப்பட்டது.

19.10.2024 அதிகாலை 3 மணிக்கு 118 வது ஆண்டு பிரதிஷ்டை அசன பண்டிகை திருவிருந்து ஆராதனை தேவசெய்தியை உடையார்குளம் சேகர குருவானவர் அகஸ்டஸ் பால்பாண்டியன் வழங்கினார். ஆராதனை முடிந்ததும் அசனத்திற்கு அரிசி ஆசீர்வதித்து அசனவேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. காலை 9 மணிமுதல் 12 மணிவரை குடும்பங்களுக்கான தனித்தனியாக எண்ணைய் பூசி ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அசனபந்திவிருந்தும் எடுப்பு சாப்பாடும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுமார் 96 மூடைகள் அரிசி பரிமாறப்பட்டது.

இரவு 9.30 மணி அளவில் ஸ்தோத்திரபவனியாக ஊரிலுள்ள அனைத்து வீதிகளிலும் சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்பட்டு ஸ்தோத்திர ஜெபம் ஆலயத்தில் ஏறேடுக்கப்பட்டது

20.10.3024 ஞாயிறு சேகர அறுப்பின் பண்டிகையாக பல்வேறு தேசங்கள், மாநிலங்கள், மிவட்டங்களின் சிறப்பு பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது

பண்டிகை ஏற்பாடுகளை சேகரகுரு அருட்திரு பாஸ்கரன் தலைமையில் சேகர கமிற்றி அங்கத்தினர்கள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ்ராஜ், செயலர் செல்லத்துரை, பொருளாளர் ஞானதுரை, ஆலய பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் மற்றும் அனைத்து ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad