தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் மும்மலைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் எட்டப்பன் மகள் ராஜலெட்சுமி (27). பிஏ தமிழ் படித்துள்ளார். வீட்டில் இருந்து வந்த அவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று மாலை ஆடு மேய்த போது ஒரு ஆடு ரயிலில் அடிபட்டு இறந்து விட்டது.
இதனை வீட்டில் சொல்ல பயந்து அவர் கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையமிடையே மதுரை மார்க்கமாக சென்ற ஒரு ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தூத்துக்குடி இருப்புப் பாதை ரயில்வே காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment