தூத்துக்குடி அருகே சென்டர் மீடியனில் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் (55). இவர் தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலை, அய்யனார் காலனி விலக்கு அருகே செல்லும்போது ஆட்டோ நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment