நாளை (23ந் தேதி) சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே 40 நாட்களாக நிறுத்தப்பட்ட 2 ரயில்களும் இயங்குகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 22 November 2024

நாளை (23ந் தேதி) சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே 40 நாட்களாக நிறுத்தப்பட்ட 2 ரயில்களும் இயங்குகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின் தடம் மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நாளை (23ந் தேதி) சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே 40 நாட்களாக நிறுத்தப்பட்ட 2 ரயில்களும் இயங்குகிறது.  

தென்னக ரயில்வேயின் அறிவிப்பின்படி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் நவம்பர் 22 ந் தேதி வரை மின்தடம் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் நெல்லை பய ணிகள் ரயில் (06676) அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை, திங்கட் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இது போல பாலக்காடு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16731) தாழையூத்து திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்தடம் மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்ததால் நாளை (நவ.23) சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad