திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2.00 லட்சம் உதவி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 December 2024

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2.00 லட்சம் உதவி.

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2.00 லட்சம் உதவி - திமுக தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 18 ம் தேதி இந்த தெய்வானை யானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தமிழக அரசுஇறந்த இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் தலாரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வழங்கினார். இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலா 2 லட்சம் ரூபாயை வழங்கினார். அதன்பின் ஒருங்கிணைந்த சான்று மற்றும் வாரிசு சான்று ஆகியவற்றையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அப்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், தாசில்தார் பாலசுந்தரம், ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ பி ரமேஷ், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி, நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெரு. மகராஜன், நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பொன் முருகேசன், திமுக இளைஞரணி சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad