தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் வீரபாண்டியன்பட்டணம் (ரூரல்) ஊராட்சி முத்து நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மீன் வளம் ,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆன்றோ, திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி,
ஒன்றிய திமுக செயலாளர் ஏ பி ரமேஷ் ,நகர செயலாளர் வாள் சுடலை,, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான செந்தில்குமார், கிளைச் செயலாளர்கள் முத்துராஜ், பிச்சைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment