இதில் பெரும்பான்மையாக 17க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த தடகள போட்டியில் ஒட்டுமொத்த முதன்மை பெண்கள் பிரிவில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் மாணவிகள் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர். வெற்றிக் கோப்பையை பி.எஸ் .என் கல்லூரியின் செயல் இயக்குநர் டாக்டர். செல்வகுமார் வழங்கினார்.
மாணவிகளின் சார்பாக வெற்றி கோப்பையை ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் பெற்றுக் கொண்டார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் முனைவர்.ரெஜினல் கிருபா செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்கள் விவேகா 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம், மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம் மற்றும் 4x400 மீட்டர் தொடர் ஒட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். ஜெல்சியால் ஜெனிபர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். குணசுந்தரி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம், 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம்.
யுவராணி 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். ஸ்வேதா 110 மீட்டர் தடை தாங்கும் போட்டியில் வெண்கல பதக்கம். மார்ட்டின் பிரிஸ்கா குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் . ஆண்கள் பிரிவில் வல்தி சிவராம் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம். ஜாபர்சன் உயரம் தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம். அல்ட்ரின் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற கல்லூரியின் மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநரையும், மாணவிகளையும், ஆசிரியை லீதியாள் ஆகியோரை கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ஜோ.ஜெயக்குமார் ரூபன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார், கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment