வாடகை கட்டிடத்தில் தொழில் செய்திடும் வணிகர்கள் வாடகை செலுத்துகின்ற தொகைக்கும் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 November 2024

வாடகை கட்டிடத்தில் தொழில் செய்திடும் வணிகர்கள் வாடகை செலுத்துகின்ற தொகைக்கும் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வாடகை கட்டிடத்தில் தொழில் செய்திடும் வணிகர்கள் வாடகை செலுத்துகின்ற தொகைக்கும் ஜிஎஸ்டி 18 சதவீதம் செலுத்த வேண்டும் என சட்டம் கொண்டு வந்த மத்திய அரசையும், அதில் பங்கு 9 சதவீதம் கிடைக்கிறது என்பதால் எந்த எதிர்ப்பும் காண்பிக்காமல் ஏற்றுக் கொண்ட மாநில அரசையும் கண்டித்தும், 

புதியதாக போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கிட கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில்
நாள் : 29-11-2024, வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, திருச்செந்தூர் - பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் மாவட்ட தலைவர் ஆவின் M.சங்கர் தலைமையில், மாநில செய்தி தொடர்பாளர் A.செல்வின், மாநில துணை தலைவர், V.செல்வன், மாநில கூடுதல் செயலாளர், டாக்டர் S.யாபேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செயலாளர் சா.மெய்தீன் வரவேற்புரை வழங்குகிறார். மாநில இணை செயலாளர்கள் க.செல்வகுமார், ச.இசக்கிமுத்து, D.குருசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ரெ.காமராசு நாடார் மற்றும் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் அகில உலக தலைவர், மாமதுரையர்முனைவர் க.திருமுருகன் (மாநில தலைவர்) சிறப்புரை ஆற்றுகிறார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் ஐக்கிய வியாபாரிகள் சங்கம்,
திருச்செந்தூர் நகர யாதவ வியாபாரிகள் சங்கம்,
திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் விற்பனையாளர் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வணிகர் சங்கம், 

ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்கம், பழைய காயல், வியாபாரிகள் நலச்சங்கம், புதுக்கோட்டை, வணிகர் சங்கம் செபத்தையாபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் வியாபாரிகள், குரும்பூர், நாடார் வர்த்தக மகமை சங்கம் குரும்பூர் சுற்று வட்டார நாடார் இளைஞர் சங்கம் தட்டார்மடம், அனைத்து வியாபாரிகள் சங்கம், பொத்தக்காலன்விளை, வியாபாரிகள் நலச்சங்கம், 

காந்தி தினசரி சந்தை அனைத்து வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், பரமன்குறிச்சி, காயாமொழி சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் ஆத்தூர் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம், முக்காணி, வியாபாரிகள் சங்கம், கூட்டாம்புளி, வியாபாரிகள் சங்கம், ஏரல் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம், 

மெஞ்ஞானபுரம், அனைத்து வணிகர் நலச்சங்கம் சாத்தான்குளம், வர்த்தக சங்கம் உடன்குடி, புதிய வணிகர் சங்கம் முள்ளக்காடு, வியாபாரிகள் சங்கம் முன்னேற்ற சங்கம், புறநகர் ரத்தினபுரி, தூத்துக்குடி, வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குபவர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் கலந்து கொள்வதாக ஆதரவு அளித்துள்ளனர் என மாநில தலைவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad