சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 November 2024

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சி.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்பவர் இந்தியாவின் கௌரவ செயலாளர் ஆ.சங்கர் மாணவ மாணவியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். 

கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில்  கல்லூரி  துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி,டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி, ஆனந்தி, ஜாக்சன், டென்னிசன், ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad