ரூ. 4.07 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.4.07 கோடி ரூபாய் மற்றும் தங்கம் 1908 கிராமும்
காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்.
உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, நவம்பர் மாதம் 26, 27 ஆகிய இரு நாள்கள் உண்டியல் எண்ணும் பணி கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையிலும் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் எண்ணப்பட்டது.இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவார பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதில், ரொக்கம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 32 ஆயிரத்து 912, தங்கம் 1908 கிராமும், வெள்ளி 21100 கிராமும், பித்தளை 26100 கிராமும் , 1.5 கிலோ செம்பு, 6 கிலோ 300 கிராம் தகரம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், நாகவேல், கண்காணிப்பாளா் ராஜாகுமாா், ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
No comments:
Post a Comment