முத்தையாபுரம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (எ) காத்திக்குமார்(32) என்பவரை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. மாதவ ராமானுஜம் இன்று (29.11.2024) குற்றவாளியான கார்த்திக் (எ) காத்திக்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்களான நாககுமாரி மற்றும் முத்துலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
No comments:
Post a Comment