கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் முற்றுகை - கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 November 2024

கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் முற்றுகை - கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.


கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர். 

பிரபல கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுப்படுத்துகின்ற வகையில் பாடல் பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு, பாடகி இசைவாணி, மற்றும் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad