தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். தூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெருமாள் கோவில் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் வி.எம்.எஸ் நகரில் ரூ.20.37 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையினால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் சேதமடைந்த ஆத்தூர் மேம்பாலப் பகுதிகளை பார்வையிட்டனர்.
தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏரல் ஆற்றுப்பாலம் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மங்கலக்குறிச்சி ஊராட்சியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டுள்ளதையும், மங்கலக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு வங்கி நியாய விலைக் கடையினையும் பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் புதுக்கோட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இயந்திரங்களை பார்வையிட்டு பயனாளிகளுக்கு வழங்கினர். அதன் தொடர்ச்சியாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி. மதுபாலன்,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர்கள், முரளி (தூத்துக்குடி), கோபால் (ஏரல்) மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment