நாசரேத் நவம்பர் 5, சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச பாரம்பரிய சிலம்பக் கலை போட்டிகள் பாண்டிச்சேரி மணக்குல விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.
அதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் தருன்சன் கலந்து கொண்டு தொடும் முறை போட்டியில் முதலிடமும், ஒற்றைச் சிலம்பப் போட்டியில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ் பரிசு கோப்பையும் சான்றிதழ்களையும் மற்றும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.
பாராட்டுவிழா நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தாளாளர் சுதாகர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment