துாத்துக்குடி - வாகைக்குளம் விமானத்தளம் முன்பு பேருந்து நிறுத்தம் - அரசு உத்தரவு.. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 December 2024

துாத்துக்குடி - வாகைக்குளம் விமானத்தளம் முன்பு பேருந்து நிறுத்தம் - அரசு உத்தரவு..

துாத்துக்குடி வாகைக்குளம் விமானத்தளம் முன்பான பேருந்து நிறுத்துத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் பொது மேலளார் வெளியிட்ட சுற்றறிக்கையில், திருநெல்வேலி - துாத்துக்குடி பிரதான சாலையிலுள்ள வாகைகுளத்திற்கும்- மங்களகிரிக்கும் இடையே அமைந்திருக்கும் வாகைக்குளம் விமானத்தளம் முன்பான பேருந்து நிறுத்துமிடத்தில் அவ்வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலங்களை சார்ந்த சாதாரண, SFS மற்றும் 1 TO 1, புறநகரப் பேருந்துகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறுத்தம் செய்து பயணிகளை மறுக்காமல் ஏற்றியும், இறக்கியும் சென்று வர ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் உத்தரவிடப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியான அமுலுக்கு வருகிறது.

மேலும் இது குறித்து குறிப்பிட்ட புகார்கள் வரப்படின் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் / நடத்துனர் மீது தகுந்த ஒழுங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி விமானத்தளம் முன்பான பேருந்து நிறுத்துத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad