தூத்துக்குடி - புனித சவேரியார் ஆலய திருவிழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 December 2024

தூத்துக்குடி - புனித சவேரியார் ஆலய திருவிழா

தூத்துக்குடியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு சவேரியாரின் சொரூபத்தை கடல் வழியாக படகில் எடுத்துச் சென்று வழிபாடு நடைபெற்றது. 

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் அமைந்துள்ள சவேரியார் சிற்றாலயம் சார்பில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி காலை பங்குத்தந்தை ரெனால்ட் மிஸ்ஸியர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் 

இதைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வந்து தென்னிந்தியாவில் கத்தோலிக்க மதத்தை பரப்பிய புனிதர் பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பணிகளை நினைவு கூறும் வகையில் இனிகோ நகர் கடற்பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட படகில் சவேரியாரின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு மீனவர்கள் படகுகளின் பவனியாக எடுத்துச் சென்று முயல் தீவு கடற்கரை திரேஸ்புரம் கடற்கரை வழியாக எடுத்துச் சென்று பின்னர் இனிகோ நகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad