நேற்று ஆகஸ்ட்.24 இரவு, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, இரவு சுமார் 9 மணிக்கு முத்தையாபுரம் அருகே வந்த போது, சாலையில் இருந்த பெயர் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்தின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது.
இதில் பேருந்தில் பயணம் செய்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment