திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாளையொட்டி உடன்குடி ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை நடுநிலை பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பாலசிங் தொடங்கி வைத்தார்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, இதய பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில் உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரமின், செம்மறிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டா மரிய தங்கம், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சுடலை கண், பொருளாளர் விஜயன், மாவட்ட பிரதிநிதி ராஜ பிரபு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரஞ்சன், நிர்வாகிகள் சித்திரை பாண்டி, கோபாலகிருஷ்ணன், பொன் இசக்கி, வி எஸ் முத்துகுமார், பிரேம்குமார், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment