நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் மரக்கன்று நடும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 November 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் மரக்கன்று நடும் விழா.

நாசரேத், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செலவசுந்தர் வரவேற்றார். 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறையின் இயக்குனரும், திருமறையூர் சேகர குருவானவருமான ஜாண் சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், என்சிசி மாணவர்கள் இயற்கையை காப்பதிலும், மரக்கன்றுகளை வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

 என்சிசி தரைப்படை பிரிவு மாணவர்களுக்கு ஒரு வீரர், ஒரு மரம் என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் என்சிசி மாணவர்கள், விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு மற்றும் தேசிய பசுமை படை பொறுப்பாளர் அம்புரோஸ் சுகிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி, இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad