ஸ்ரீவைகுண்டம் டிச.1 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 5 வது திவ்யதேசமான இரட்டை திருப்பதி சுவாமி தேவர்பிரான் கோவிலில் பிரம்மோற்சவ த்தை முன்னிட்டு இன்று கருடசேவை நடந்தது.
கார்த்திகை மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதனை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம். 9..00.மணிக்கு உற்சவர் தேவர்பிரான் தாயார்களுடன்குறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம். 10 மணிக்கு அலங்காரம். 10.20 மணிக்கு தீபாராதனை. 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை. 12 30 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சாயரட்சை. 5.00 மணிக்கு சுவாமி தேவர்பிரான் மற்றும் தொலைவில்லி மங்கலம் செந்தாமரை கண்ணன் ஆகிய இருவரும் கருட வாகன மண்டபத்தில் 6.00 எழுந்தருளி அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார்கள்.
பின்னர் மாட வீதி சுற்றி வந்து 6.30 மணிக்கு இறங்கினார். தினசரி மாலை மணிக்கு யானை.சந்திரபிரபை வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். 6 ந்தேதி தீர்த்த வாரி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆத்தான் வடக்கு திருமாளிகை வரதாச்சாரியார் கீழத்திருமாளிகை ராமானுஜ ஸ்வாமி. கோவில் அர்ச்சகர்கள் ரகு. சுந்தர ராஜன்.கண்ணன் பாலாஜி.ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன். சந்தானம் . நிர்வாக அதிகாரி சதீஷ். அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன். உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி. செந்தில். காளிமுத்து. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் விஜயகுமார். பொறியாளர் சுப்பு. களப் பணியாளர்கள் பாலாஜி. பத்மநாபன்.
உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment