வணிகர்களின் வணிக வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட 18% ஜீ.எஸ்டி வரியை நீக்க வேண்டி தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் ரெ.காமராசு நாடார் முதல்வருக்கு மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கம் நிறுவன தலைவர் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழக வியாபாரிகளில் அதிகமானவர்கள் சிறு, குறு வியாபாரிகளாக, வாடகை கட்டிடங்களில் வியாபாரம் செய்து தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். அதிகமான வியாபாரிகள் கடை வாடகை செலுத்த முடியாமலும் மின் கட்டணம் செலுத்த முடியாமலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே அரசு GST கவுன்சில் கொண்டு வந்த பின் ஒவ்வொன்றாக எல்லா பொருட்களுக்கும் இதுவரை இல்லாத அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களையும் GST க்குள் கொண்டு வந்து மக்கள் வணிகர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தில் உள்ள நிலையில், கடை வாடகைக்கும் 18 சதவீகிதம் GST கட்ட வேண்டும் என்பது, வாடகை வாங்குபவர் GST கட்ட வேண்டும் என்பது, வேறு வாடகை செலுத்துபவரும் GST கட்ட வேண்டும் என்பது, சொந்த நாட்டு மக்களை பழிவாங்குவது போல் உள்ளது.
அரசானது மக்களையும் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் விளங்கும் வணிகர்களையும் வாழ வைக்க சட்டம் இயற்ற வேண்டுமே யொழிய வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்க அரசும் சட்டமும் தேவையில்லை என்பதை உணர வேண்டும்.
வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து கொடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து வணிகர்களை சிரமத்துக்கு ஆளாக்காமல் இத்தகைய சூழலில் அரசும் GST வரியை வாடகை கட்டிடத்துக்கு 18% (மத்திய அரசு 9% மாநில அரசு 9%) விதித்துள்ளது அதிகபடியான வாடகையோடு 18% GST வரியையும் வியாபாரிகள் செலுத்த முடியாமல் தங்கள் வியாபாரத் தொழிலையே நிறுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் வாழ்வை நடத்தி வருகின்றனர்.
எனவே மத்திய மாநில அரசுகள் வியாபாரிகளின் நிலையை அறிந்து உடனடியாக 18% GST நீக்கி, வியாபாரிகள் வாழ்வில் ஒளியேற்ற அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment