குதிரைமொழி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 November 2024

குதிரைமொழி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  மற்றும் மீன்வளம்  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன்  ஆகியோரின் வழிகாட்டுதலின் படி உடன்குடி ஒன்றியம் குதிரைமொழி  ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்  யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில்  நடைபெற்றது. 

கூட்டத்தில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் மக்களின் அடிப்படை வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர். 

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை பிரிவு  அஜித், சமூக நலத்துறை  அதிகாரி ஜெயக்கொடி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad