முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. நேற்று யானை தெய்வானையின் அருகில் நின்று செல்பி எடுத்த பாகனின் உறவினரான சிசுபாலன் மற்றும் யானை பாகன் உதயகுமார் ஆகியோரை யானை மிதித்துக் கொன்றது. இதைப் பார்த்த பக்தர்களை அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மற்ற பாகன்கள் மூலம் யானை இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டது. இதனிடையே உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் மற்றும் பலியான இரண்டு பேரும் குடும்பத்தினர் திரண்டு இருந்தனர். பலியான பாகன் உதயகுமார், சிசுபாலன் உடலுக்கு கோவில் தக்கார் அருள் முருகன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் கோயில் ஆணையர் ஞானசேகரன், அறங்காவலர் குழு தலைவரின் உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் வாள்.ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெரு. மகாராஜன், 2 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பொன் முருகேசன்
திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்க தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான ஆனந்த ராமச்சந்திரன், கோட்டை ஜான், அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பாகன் உதயகுமாரின் உடல் திருச்செந்தூர் வ உ சி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் திருநெல்வேலி சாலையில் உள்ள சைவ வேளாளர் சமுதாய மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment