குலசை முத்தாரம்மன் கோவிலில் ரூ. 47லட்சத்து 55ஆயிரம் உண்டியல் காணிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 21 November 2024

குலசை முத்தாரம்மன் கோவிலில் ரூ. 47லட்சத்து 55ஆயிரம் உண்டியல் காணிக்கை.

குலசை முத்தாரம்மன் கோவிலில் ரூ. 47லட்சத்து 55ஆயிரம் உண்டியல் காணிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது . கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. 

அதன்படி கடந்த 25ஆம் தேதி முதல் இன்று வரையிலான காணிக்கைகள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கோமதி, சாத்தான்குளம் ஆய்வாளர் முருகன், கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், உறுப்பினர்கள் கணேசன், வெங்கடேஸ்வரி, ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கைகள் எண்ணும் பணியில்  ஈடுபட்டனர். இதில் 47 லட்சத்து 55 ஆயிரத்து 317 ரூபாய் ரொக்கம், 91.400 கிராம் தங்கம், 560கிராம் வெள்ளி  காணிக்கையாக கிடைத்தன.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad