நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 November 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்.

நாசரேத், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நடைபெற்றது. முகாமினை, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற கருத்துக்களின் அடிப்படையில் முகாம் நடைபெற்றது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கான புதிய வாக்காளர் பெயர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கான படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. 

முகாமில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் பராசக்தி, காசி மயில் மற்றும் நேசராணி ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு பல்வேறு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்த படிவங்களைப் பெற்றுக் கொண்டனர்.முகாமிற்கு வந்திருந்தவர்களுக்கு, வாக்காளர் உதவிமையச் செயலி குறித்தும், வாக்காளர் உதவிமைய சேவை எண் 1950 குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. 

நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் தலைமையில் வாக்காளர் மைய பொறுப்பாளர் தனபால், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad