உடன்குடியில் பெய்த மழையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 21 November 2024

உடன்குடியில் பெய்த மழையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. 

திருச்செந்தூர் பகுதியிலும் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 3 நாளாக இன்றும் திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை குலசேகரன்பட்டினம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, காயாமொழி, நடுநாலு மூலைக்கிணறு, கீழநாலு மூலைக்கிணறு, முத்தையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்படாத நிலையில், மாணவ,மாணவிகள் குடைபிடித்த படி பள்ளிகளுக்கு சென்றனர். ஒரு சில மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர். உடன்குடி பகுதியில் இன்று பெய்த கன மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

உடன்குடியில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் உள்ள மரக்கடை பேருந்து நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. அதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்

தமிழ குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad