முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 22-11-2024 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment