நவம்பர் 25 இன்று காலை வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள இந்த சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 26-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதுபோல் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக
ஏரல் சேதுபதி ராஜா.
No comments:
Post a Comment