திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 30 July 2024

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

IMG_20240730_161507_222

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா  தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 11 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா கடந்த  வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் கொடியேற்றி விழா வை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தினமும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல், அன்னதர்மம் வழங்குதல்,  உச்சி படிப்பு, பணிவிடை, அன்ன தர்மம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 11ம்நாள் திருவிழாவான இன்று தேரோட்டம்  நடக்கிறது. வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில்  செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யா பழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கோபால் நாடார் உள்பட ஏராளமான அய்யா வழி ஆண், பெண் பக்தர்கள்  கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயா வைகுண்டர் அவதார பதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தமிழர் குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad