தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் தூத்துக்குடி பாரதி லயன்ஸ் கிளப் சார்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 July 2024

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் தூத்துக்குடி பாரதி லயன்ஸ் கிளப் சார்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

 


தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் தூத்துக்குடி பாரதி லயன்ஸ் கிளப் சார்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.



தூத்துக்குடி, ஜூலை.27, ஆயுதப்படை வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பயன்படும் வகையில் லயன்ஸ் கிளப் ஆப் தூத்துக்குடி பாரதி  சார்பாக ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (RO Water Plant) அமைக்கப்பட்டது.


புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (27.07.2024) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியபோது இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை காவலர்களின் நலன் கருதி சேவை மனப்பான்மையுடன் ஆயுதப்படை வளாகத்தில் ஏற்பாடு செய்த லயன்ஸ் கிளப் ஆப் தூத்துக்குடி பாரதி அமைப்பிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை சிறப்பான முறையில் பராமரித்து ஆயுதப்படை காவல்துறையினர் பயன்படுத்திக் கொண்டு தங்கள் உடல் நலத்தை பேணிக் காத்து நீங்களும் இதுபோன்ற சேவையை செய்ய வேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.


இந்நிகழ்வின் போது லயன்ஸ் கிளப் ஆப் தூத்துக்குடி பாரதி அமைப்பின் மூத்த நிறுவனர் ரபேல், தலைவர் அழகுசாமி, செயலாளர் சுந்தர், சங்க நிர்வாகி வசீகரன், முன்னாள் செயலாளர் சுவாமிநாதன் உட்பட உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad