போக்குவரத்துக்கே லாயக்கற்ற புன்னக்காயல் ஆத்தூர் சாலை - போர்கால அடிப்படையில் சரி செய்ய கோரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 January 2025

போக்குவரத்துக்கே லாயக்கற்ற புன்னக்காயல் ஆத்தூர் சாலை - போர்கால அடிப்படையில் சரி செய்ய கோரிக்கை.

மழை வெள்ளத்தில் முற்றிலும் பழுதாகி போக்குவரத்துக்கே லாயக்கற்ற புன்னக்காயல் ஆத்தூர் சாலை.

போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் தமிழக முதல்வருக்கும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும்,  திருச்செந்தூர் தொகுதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - க்கும் கோரிக்கை விடுவித்துள்ளார்.

ஒவ்வொரு புயல் மற்றும் வெள்ளத்தில் முற்றிலுமாக சேதமாகி உள்ள புன்னக்காயல் முதல் ஆத்தூர் வரை உள்ள சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சரி வேண்டும். 

எந்த ஒரு இயற்கை சீற்ற இடர்பாடுகள் ஏற்பட்டாலும், இந்த புன்னகாயல் பகுதி முற்றிலும் ஒதுக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. வெள்ள நேரங்களில் அதிகம் இந்த பகுதி தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே தமிழக அரசு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு செய்து இந்த சாலைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும், என்று மாநில பயணிகள் நலச் சங்க சாந்தகுமார் கோரிக்கை விடுவித்துள்ளார். 

மேலும் இந்த பகுதி மக்களும் இது போன்ற தேவைகளுக்கு தான் அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad