திருச்செந்தூர் மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மக்கள் பார்வையிட அனுமதி.... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 7 June 2024

திருச்செந்தூர் மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மக்கள் பார்வையிட அனுமதி....


 திருச்செந்தூர் மணப்பாடு கலங்கரை விளக்கத்தை மக்கள் பார்வையிட அனுமதி....




பெரியவர்களுக்கு ₹10, சிறியவர்களுக்கு ₹5கட்டணம்....  தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கலங்கரை விளக்கம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கலங்கரை விளக்க அலுவலர் மதனகோபால் கூறுகையில், மணப்பாடு  கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இன்று முதல் வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரையும் பார்வையிடலாம். இந்தியர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ரூ.10,வெளிநாட்டவருக்கு ரூ.25 வசூலிக்கப்படும். 12 வயதிற்குபட்டவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.
பார்வையாளர்கள் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும், என்றார். அப்போது உதவி அலுவலர்கள்  பிரபு, செந்தில் குமார் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad