ஆலந்தலை இயேசுவின் திரு இருதய பெருவிழா.... நாம் அன்பிலே சிறந்தவர்களாக இருக்க வேண்டும் .... திருச்சி ஆயர் ஆரோக்கியராஜ் நற்செய்தி...
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் மாதத்தின் முதல் வெள்ளியான நேற்று திரு இருதய ஆண்டவர் பெருவிழா 350 - வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திருச்சி மறை மாவட்ட மேதகு ஆயர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு சிறப்பு நற்செய்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது. பிறர் அன்பை பெற வேண்டும். யேசுவின் இருதயத்தை போல நம் இருதயமும் இருக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு சலி த்தவர் அல்ல. அன்பிலே சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என சிறப்பு நற்செய்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு முன்னாள் முதன்மை குரு பன்னீர்செல்வம். மற்றும் அருட்தந்தையர்கள். அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளையும் திருத்தல அதிபர் சில்வெஸ்டர் மற்றும் உதவி பங்கு தந்தை ஜோதிமணி. பக்த சபைகள்,ஆலந்தலை இறைமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment