திருக்கோளூர் ஸ்ரீ அக்கர மகாதேவ ஈஸ்வரர் திருக்கோயில் வருஷேபிஷேக விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Sunday, 9 June 2024

திருக்கோளூர் ஸ்ரீ அக்கர மகாதேவ ஈஸ்வரர் திருக்கோயில் வருஷேபிஷேக விழா

 

IMG_20240609_210546_632

திருக்கோளூர் ஸ்ரீ அக்கர மகாதேவ ஈஸ்வரர் திருக்கோயில் வருஷேபிஷேக விழா


நாசரேத்.ஜூன்.10, நாசரேத் அருகேயுள்ள ஸ்ரீதிருக்கோளூர் ஸ்ரீ.அக்கர மகாதேவ ஈஸ்வரர் திருக்கோயில் 10.ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
                   
நேற்று ஞாயிறு காலை 5.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, வேதபாராயனம், ஸ்ரீ மகாகணபதி ஹோமம், சுவாமி அம்பாள் மூல மந்த்ர நத்ர மாலா மந்த்ர ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், அஸ்த்ர ஹோமம், திரவ்யாகுதி, வஸ்த்ராகுதி 7.00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனையும்,
                      
9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் யாத்ராதானம், கடம் எழுந்தருளல், ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத, ஸ்ரீ அக்கரை மகாதேவ ஈஸ்வரர் ஆலய விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. 11.00 மணிக்கு மகாபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது.
                
11.00 மணிக்கு  திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார். 12.30 மணிக்கு கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஸ்தலத்தார் டாக்டர்.கார்மேகராஜ் தலைமையில் பக்தமெய்யன்பர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad