ஆழ்வார்திருநகரி டிச. 29. வைணவத்தின் முன்னோடியான எம்பெருமானார் என்ற இராமானுஜரின் ஆசாரியன் பெரிய நம்பி. இன்று பெரிய நம்பி அவதார திரு நட்சத்திரம் மார்கழி கேட்டையை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள நம்பி சந்நிதியில் நடந்தது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு திருவாராதனம். 10.30 மணிக்கு திருப்பல்லாண்டு. திருப்பாவை உபதேசரத்ன மாலை சாத்து முறை கோஷ்டி பெரிய நம்பி சம்பத்.பெரியநம்பி ரெங்கராமாநுஜம். பெரிய நம்பி பார்த்த சாரதி. பெரிய நம்பி கோவிந்தன்.பெரியநம்பி ரகுராம். முத்தப்பன். சீனிவாசன். அர்ச்சகர்
ஸ்ரீதரன் ஆகியோர் சேவித்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சாயரட்சை. திருவாய்மொழி நூற்றந்தாதி நடந்தது. ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இருந்து பிரசாதம் வரப் பெற்று பெரிய நம்பிக்கு மரியாதைகள் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜப்பா வெங்கடாச்சாரி. சந்தான கோபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment