சாயர்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் ஜி.யு. போப் - பெயர் வைப்பதற்கு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு தலைவர், முன்னாள் தலைவர் - மற்றும் நிர்வாகிகளுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
தூத்துக்குடி மாவட் டம் சாயர்புரத்தில் ஏராள மான கல்வி நிலையங்கள் இருந்து வந்த போதிலும் இங்கு பஸ் நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து 2010ல் அப்போதைய சாயர்புரம் பேரூராட்சி தலைவராக இருந்த பொன்சேகர், பஸ் நிலையம் அமைப்பதற்கு அரசு இடம் இல்லாததால் சாயர்புரம் போப் கல்லூரியை அணுகி பஸ் நிலையம் அமைவதற்கு இடம் கேட்டு இருந்தார்.
இதையடுத்து திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிச்சந்தர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் மூலம் சாயர்புரம் போப் கல்லூரிக்கு சொந்தமான 51 சென்ட் நிலத்தை பஸ் நிலையம் அமைவதற்காக பெற்று கொடுத்து, பஸ் நிலையம் அமையும் பட்சத்தில் அதற்கு டாக்டர் ஜி.யு போப் பஸ் நிலையம் என பெயர் வைத்திட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடம் கொடுத்திருந்தனர்
No comments:
Post a Comment