தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக சங்கர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறிமுக கூட்டம் உடன்குடியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயற்குழு சேர்மலிங்கம் தலைமை தாங்கினார்.
விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் திருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வைகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாநில மகளிர் அணி தலைவர் உமா ரதிராஜன் ஆகியோர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவராக சங்கர குமாரை தேர்ந்தெடுத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், மாவட்டச் செயலாளர் கனல் ஆறுமுகம், ராம கனி, மாவட்ட மகளிர் தலைவி தேன்மொழி, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா உட்பட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் பசுபதி சிவசிங், சங்க சிவன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment