திருச்செந்தூர் புதிய டிஎஸ்பியாக மகேஷ் குமார் பதவியேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 November 2024

திருச்செந்தூர் புதிய டிஎஸ்பியாக மகேஷ் குமார் பதவியேற்பு.

திருச்செந்தூர் புதிய டிஎஸ்பியாக மகேஷ் குமார் பதவியேற்பு - காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வந்த வசந்தராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு அவருக்கு எஸ் பி அல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து திருச்செந்தூர் உட்கோட்ட புதிய டிஎஸ்பியாக மகேஷ் குமார் நியமிக்கப்பட்டு நேற்று (நவ.25) பொறுப்பேற்றுக் கொண்டார் . 

கோவையை சேர்ந்த இவர் நெல்லையில் பயிற்சி பெற்று, திருச்செந்தூரில் டிஎஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக 
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad