வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.O மையத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் பல்வேறு தொழில்பயிற்சிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் எவ்வாறு பயனடைகின்றனர் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, புளியமரத்து அரசரடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் கல்விமுறைகள், பாடநூல்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மாணவர்கள் எவ்வாறு தமிழில் எழுதப் படிக்கின்றனர் என்பது குறித்தும், ஆங்கிலத்தில் மாணவர்களின் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார்,இ.ஆ.ப., (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் திறன் மேம்பாடு ஏஞ்சல் விஜய நிர்மலா, பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம் சொல்ணலதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி)சத்யா, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment