தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 September 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிப்பு.


தூத்துக்குடி மாவட்டத்தில்  5 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிப்பு. 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வித் துறை சார்பில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இதில், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியாள் ஞானமணி, காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன், உடன்குடி பண்டாரன்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரோனின் சுதா, ஆத்தூர் சி.சண்முக நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்ஸன் சஞ்சித்சிங், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜகுமார் ஆகியோருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad